செய்திகள்

வடமதுரை அருகே தோட்டங்களில் குட்டை அமைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

Published On 2017-06-16 11:39 GMT   |   Update On 2017-06-16 11:39 GMT
வடமதுரை அருகே தோட்டங்களில் குட்டை அமைத்து அந்த தண்ணீரை விவசாயிகள் பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மழை இல்லாததால் தற்போது கிடைக்கும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி காய்கறி செடிகளை பயிரிட்டுள்ளனர்.

அந்த செடிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் போர் வெல்லில் தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரை தங்கள் தோட்டங்களில் குட்டைபோல அமைத்து அதில் தேக்கி வருகின்றனர். அந்த தண்ணீரை முள்ளங்கி, சோளப்பயிர் மற்றும் தக்காளி போன்ற செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இது குறித்து அய்யலூர் அருகில் உள்ள கண்டமநாயக்கனூரை சேர்ந்த விவசாயி தெரிவிக்கையில், மழை இல்லாததால் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. போர்வெல் தண்ணீரும் சரிவர கிடைக்காததால் இரவு முழுவதும் தண்ணீரை எடுத்து அதனை தேக்கி வைத்து செடிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் இல்லாததால் பல இடங்களில் செடிகள் காய்ந்து வருகிறது.

எனவே குறுகிய கால பயிர்களாக காய்கறி செடிகளையும், கால்நடைகளுக்கு தீவனமாகும் சோளத்தையும் பயிர் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News