செய்திகள்

திருச்செந்துறை வாழை வணிக வளாகத்தில் 186 வாழைத்தார்கள் ஏலம்

Published On 2017-06-08 16:04 GMT   |   Update On 2017-06-08 16:04 GMT
திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில் வாழைத்தார் பொதுஏலம் நடைபெற்றது. மொத்தம் 186 வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்தன.
திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில்  வாழைத்தார் பொதுஏலம் நடைபெற்றது. மொத்தம் 186 வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்தன. கிளியநல்லூர், குழுமணி, பெரியகருப்பூர் ஆகிய கிராமங்களிலிருந்து 4 விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ரூ.10,225 மதிப்பிற்கு ஏலம் நடைபெற்றது.      

பூவன்தார் அதிகபட்சமாக ரூ.80 -க்கும், பச்சலா டன் தார் அதிகபட்சமாக ரூ.75-க்கும், கற்பூரவள்ளிதார் அதிக பட்சமாக ரூ.70-க்கும், மொந்தன்தார் அதிக பட்சமாக ரூ.50-க்கும், ஏலம் போனது. நல்ல தரமான வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு உரிய பணம் அன்றே பட்டுவாடா செய்யப்பட்டது. வாழை விவசாயிகள் அனைவரும் இந்த விற்பனை வாய்ப்பினை பயன்படுத்தி அதிக வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜீயபுரம், குழுமணி, கோப்பு ஆகிய ஊர் களிலிருந்து மொத்தம் 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் 13.6.2017 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாழைத்தார்களை ஏலம் எடுக்க வியாபாரிகளுக்கும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News