செய்திகள்

மத்திய அரசை கண்டித்து தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாட்டுக்கறி சமைத்து போராட்டம்

Published On 2017-05-31 08:57 GMT   |   Update On 2017-05-31 08:57 GMT
மத்திய அரசை கண்டித்து புதுவை நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் சுதேசி மில் அருகே மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

மத்திய அரசு சமீபத்தில் மாட்டு இறைச்சி விற்பனையை தடை செய்யும் நோக்கில் ஒரு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு போராட்டங்களும் நடை பெற்று வருகிறது.

இதே போல் புதுவையிலும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதுவை சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார்.

இந்த நிலையில் புதுவை நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து சுதேசி மில் அருகே இன்று ஒன்று கூடினர். அவர்கள் ரோட்டில் பாத்திரங்களை வைத்து மாட்டுக்கறி சமைத்தனர். அதை அவர்கள் அனைவரும் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மாட்டுக்கறி தடை சட்டத்தை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் துணை தலைவர் ஜான் பியர், செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தீனா, ராஜா, பிரபு, தமிழ் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News