செய்திகள்

ஆம்பூரில் மதுக்கடை சூறை: முன்னாள் நகரமன்ற தலைவர் உள்பட 7 பேர் கைது

Published On 2017-05-25 11:45 GMT   |   Update On 2017-05-25 11:45 GMT
ஆம்பூரில் மதுக்கடையை சூறையாடிய சம்பவத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள நதிசீலபுரம்- நடராஜபுரம் கூட்ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்ட போது, சுமார் 10 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு, அன்றிரவு 7 மணியளவில் போராட்டம் வெடித்தது.

பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மதுபான பாட்டில்களை அடித்து, நொறுக்கி மதுக்கடையை சூறையாடினர். இச்சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பிரமுகரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான நசீர் அகமது, காங்கிரஸ் கட்சி பிரமுகரும், முன்னாள் நகரமன்ற கவுன்சிலருமான சுதாகரன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை முடிவில், மதுக்கடையை சூறையாடிய சம்பவத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் நசீர் அகமது, அறிவழகன், நவீன் (வயது 18), வினோத் (20), இளங்கோ (48), பிரவீண் (34), பிரதீப் குமார் (35) ஆகிய 7 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News