செய்திகள்

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்று சேர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published On 2017-05-23 10:10 GMT   |   Update On 2017-05-23 10:10 GMT
அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே எனது கருத்து என கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவை:

ஊட்டி செல்ல டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கோவை வந்தார். அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு.க. அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நாளிதழை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார். அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதில் தவறு ஏதேனும் இல்லை.

நேற்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்- அமைச்சரை சந்தித்தது தொகுதி மக்களின் கோரிக்கைகளை சொல்லதான். அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட சொன்னதாக வெளியான தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News