செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு தேசிய மாநாடு

Published On 2017-04-20 09:53 GMT   |   Update On 2017-04-20 09:53 GMT
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாடு சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடந்தது.
சென்னை:

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் கடல் வழியே புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு 2 முறை ஆபரே‌ஷன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடலோர பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாடு சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்தது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட ஏராளமான போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய கடலோரங்களில் ஒட்டியுள்ள 13 மாநில போலீஸ் அதிகாரிகளும், தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதை குறித்தும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது பற்றியும், மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

Similar News