செய்திகள்

கும்பகோணத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2017-03-27 11:30 GMT   |   Update On 2017-03-27 11:30 GMT
கும்பகோணத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவாமிமலை:

பல்கலைக்கழக நிதியை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசின் பல்கலைக்கழக நிதி வழங்கும் குழுவின் சார்பில் 11, 12-வது திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ஆனால் கடந்த 2011 முதல் 2016 வரையான நிதியை பொய்கணக்கு காட்டி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவில்லை.

இந்த மோசடியால் 2011 முதல் 2016 வரை 18 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News