செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் பாதிப்பு

Published On 2017-01-26 15:11 GMT   |   Update On 2017-01-26 15:11 GMT
மணல் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கட்டுமான தொழிலை நம்பி நிறைய பேர் உள்ளனர். அன்றாடம் கட்டுமானத் தொழிலுக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்தக் கூடிய நிலைமையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர்கள் மணல்வரத்து சரியாக வராததாலும் ஒரு யூனிட் மணல் விலை அதிகமாக கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும், கட்டுமான தொழிலில் முடக்கம் ஏற்பட்டது.

மணல் சரியாக கிடைக்காததால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை கிடைக்கவில்லை. வாரத்தில் 2 நாட்கள் வேலை கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செலாளர் திருமலை கட்சியின் நகர் குழு கூட்டத்தில் இது குறித்து பேசினார். இந்த கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகளில் ஏலம் நிறுத்தப்பட்டதால் மணல் வரத்து இல்லை. மணல் குவாரிகளில் முறைகேடுகள் அதிகளவு நடைபெறுகிறது. முறைகேடுகளை கலைந்து மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், கட்டுமான தொழிலையும் பாதுகாக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News