செய்திகள்

திண்டுக்கல் அருகே மதிப்பெண் குறைந்ததால் வி‌ஷம் குடித்த மாணவி

Published On 2016-10-15 15:14 GMT   |   Update On 2016-10-15 15:14 GMT
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வி‌ஷம் குடித்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள செம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்தார். இதனால் வீட்டில் திட்டுவார்களோ என பயந்த சவுந்தர்யா வி‌ஷம் குடித்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த ராமர் மகன் கார்த்திக் (வயது 25). இவர் அழகர்நாயக்கன்பட்டியில் குடும்ப பிரச்சினை காரணமாக வி‌ஷம் குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தம்மகுளத்துப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கோபி (10) பேன் மருந்தை குடித்து மயக்கமடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News