உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தஞ்சையில் இன்று 20 கி.மீ. மாரத்தான் ஓடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்-உடல்நலம் பேண விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Published On 2022-07-10 09:51 GMT   |   Update On 2022-07-10 09:51 GMT
  • எங்கு மாரத்தான் நடந்தாலும் அதில் கலந்து கொண்டு ஓடி உடல் நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
  • 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இன்று காலை போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மாற்றத்திற்கான மாரத்தான்-2022 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போட்டியை தொடங்கி வைத்ததோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாரத்தான் ஓடி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் எங்கு மாரத்தான் நடந்தாலும் அதில் கலந்து கொண்டு ஓடி உடல் நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று வல்லத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் 20 கிலோ மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். மேலும் போட்டியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் ஓடினர். வல்லம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாரத்தான் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்குக்கு வந்து பின்னர் அங்கிருந்து பல்கலை கழகத்துக்கு சென்று முடிவடைந்தது.

இதேப்போல் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் பிரிவிலும் மாரத்தான் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக நடந்தது. இந்த பிரிவிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாற்றுதிறனாளி ஒருவரும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்க–ப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திர–சேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு தடகளம் சங்கம் துணை தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி–ப்பிரியா, பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ், துணைவேந்தர் வேலுசாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திகேசவன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை தடகள சங்க செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News