உள்ளூர் செய்திகள்

தேசிய திறனறித் தேர்வில் கோவை பள்ளி மாணவர்கள் 196 பேர் தேர்ச்சி பெற்றனர்

Published On 2022-07-02 10:02 GMT   |   Update On 2022-07-02 10:02 GMT
  • மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மொழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.
  • 4 ஆண்டு களுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படு கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும்.

கோவை:

தேசிய திறனிறித் தேர்வில் கோவையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மொழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9,10,11,12 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இதன்படி 4 ஆண்டு களுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படு கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக்கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவி தொகையின் நோக்கமாகும்.

மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த மார்ச் 5-ந் தேதி தேர்வு நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் வெளி யானதில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கோவையில் மட்டும் 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News