உள்ளூர் செய்திகள்

கட்டுமான பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள்

Published On 2022-07-12 09:25 GMT   |   Update On 2022-07-12 09:25 GMT
  • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • ஆஸ்பத்திரியின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது பற்றி தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 1.5 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தனி பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. ஆஸ்பத்திரியின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அவைகளை அகற்றியதால் அரசு ஆஸ்பத்திரி பகுதி தூய்மையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News