செய்திகள்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி

Published On 2021-05-02 12:45 GMT   |   Update On 2021-05-02 13:16 GMT
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 86,162 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 86,162 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் 62, 420 வாக்குகள் பெற்று சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

முன்னதாக, 24ஆவது சுற்று முடிவில் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் 86,162 வாக்குகள் பெற்றிருந்தார்.

அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 62,420, அமமுக எஸ்.வடமலை பாண்டியன் 3,714, நாம் தமிழர் செ.குளோரியான் 14,963 மநீம ஜெயந்தி 1,949 வாக்குகள் பெற்றிருந்தனர்.
Tags:    

Similar News