செய்திகள்
எல்கே சுதீஷ்

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்- எல்.கே.சுதீஷ் பேட்டி

Published On 2021-03-09 08:23 GMT   |   Update On 2021-03-09 08:23 GMT
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி என்று எல்.கே. சுதீஷ் கூறினார்.
சென்னை:

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியதாவது:

‘‘அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வை வீழ்த்த தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பா.ம.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News