செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் - மு.க.ஸ்டாலினின் 6-ஆம் கட்ட சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

Published On 2021-03-04 18:56 GMT   |   Update On 2021-03-04 19:43 GMT
சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 5 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 5 கட்ட பிரசாரத்தை முடித்துள்ள அவர், 6-ம் கட்ட பிரசாரத்தை மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் ஆறாம் கட்டமாக மேற்கொள்ளும் ‘உங்கள்தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் தனது 6-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வார் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News