செய்திகள்

பூரண மதுவிலக்கு என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் - தமிழக அரசை விமர்சிக்கும் கமல்

Published On 2018-03-01 03:23 GMT   |   Update On 2018-03-01 03:23 GMT
பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுவதாகவும், ஒட்டுமொத்த சமுதாயத்தையம் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது என்றும் கமல் கூறியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
சென்னை:

தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள நடிகர் கமல் ஹாசன் கூறியிருப்பதாவது:-

பெண்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறீர்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது. அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் நடக்கும்.

மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதை குறைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக குடியை நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

கிராம மேம்பாடே எங்கள் கொள்கை. அங்கே என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டைப் போன்று விவசாய மேம்பாட்டுக்கும் பல திட்டங்கள் வைத்துள்ளோம்.



கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னுக்கு இழுக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam  #tamilnews
Tags:    

Similar News