செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி விதிக்க சட்ட மசோதா தாக்கல்

Published On 2017-06-24 09:35 GMT   |   Update On 2017-06-24 09:35 GMT
கேளிக்கைள் மீதும், வேடிக்கை நிகழ்ச்சிகள் மீதும் வரி விதித்து வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகள், கேளிக்கை வரி விதிக்க ஒரு சட்டமுன் வடிவை தாக்கல் செய்தார்.

கேளிக்கைகள் மீதும் வேடிக்கை நிகழ்ச்சிகள் மீதும் (சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி, குதிரை பந்தயம், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு) வரி விதித்து வசூலிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

உத்தேசிக்கப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் பிரிவின்படி 1939-ம் ஆண்டு கேளிக்கை வரி சட்டத்தை நீக்கம் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.

எனவே கேளிக்கைள் மீதும், வேடிக்கை நிகழ்ச்சிகள் மீதும் வரி விதித்து வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News