லைஃப்ஸ்டைல்

காதல் முறிந்தால் கவலையில்லை

Published On 2017-10-02 05:48 GMT   |   Update On 2017-10-02 05:48 GMT
காதல் முறிந்தால் கவலையில்லை.. அதில் இருந்து மீள்வதற்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் காதல் முறிவு (பிரேக் அப்) பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காதலில் தோல்வி அடைந்தவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார்கள். ஒருசிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். படித்து கொண்டிருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மனதொடிந்து போய்விடுகிறார்கள்.

சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் தவறான முடிவுக்கு வருகிறார்கள். விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் காதல் முறிவு ஏற்பட்டால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். காதலில் தோல்வி அடைந்துவிட்டால் அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

அதில் இருந்து மீள்வதற்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அவரை விட சிறந்தவர் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டு அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். பெற்றோரும் மகளிடம் பக்குவமாக பேசி அதிலிருந்து மீள வைக்க வேண்டும்.

அதைவிடுத்து, ‘நான்தான் அப்போதே சொன்னேனே. அவன் நல்லவன் இல்லை என்று! நீ கேட்காமல் அவன் பின்னால் சென்றாய். இப்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கிறாய்’ என்று கூறி அவள் மனதை காயப்படுத்தக்கூடாது. முன்பை விட அதிக அன்பை பொழிய வேண்டும். அவள் வாழ்க்கை மீது அதிக அக்கறை காண்பித்து, அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
Tags:    

Similar News