லைஃப்ஸ்டைல்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறைகள்

Published On 2017-08-01 04:57 GMT   |   Update On 2017-08-01 04:57 GMT
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை குறித்து நிபுணர்கள் கூறும் சில முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை குறித்து நிபுணர்கள் கூறும் சில முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. காகித ஆவண வடிவில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்திலும், ரீபண்டு கோரப்படாத நிலையிலும் மட்டுமே அவ்வாறு தாக்கல் செய்ய இயலும்.

2. வருமான வரித்துறையின் வலைதளத்தில் கணக்கு தாக்கல் செய்யலாம். அதில் முறையான படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின் பூர்த்தி செய்து மின் கோப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வருமான வரித்துறையின் வலைதளத்திற்குள் சென்று, அதனை பதிவேற்றம் செய்து பின் சமர்ப்பிக்க வேண்டும்.

3. பயனர் முகவரி (ஐ.டீ) மற்றும் கடவுச்சொல்லுடன் (பாஸ்வேர்ட்) வருமான வரித்துறையின் வலைதளத்தில் நுழைந்து குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி செய்து, நேரடியாக அதே வலைதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

4. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் சிரமங்களை உணரும் பட்சத்தில், வருமான வரித்துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் உதவியை நாடலாம். அவர்கள் இந்தப் பணியை நிறைவேற்றித் தருவார்கள்.

5. மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பல வலைதளங்கள் இருக்கின்றன. கணக்குத் தாக்கல் செயலிகளும் (ஆப்ஸ்) உண்டு. உதவி செய்ய கணக்கு தணிக்கை நிபுணர்களும் இருக்கிறார்கள்.
Tags:    

Similar News