search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கு தாக்கல்"

    • வருமான வரித்துறை அலுவலகத்துக்கு செல்லவோ, அதிகாரிகளை பார்க்கவோ அவசியமில்லை.
    • கணக்கு தாக்கல் செய்தால் போதும் என பலர் நினைக்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில், வருமான வரி சிறப்பு கருத்தரங்கம் ஆன்லைனில் நடந்தது.கருத்தரங்கை துவக்கிவைத்து வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் பேசுகையில், வருமான வரி சட்டம் அறிமுகமானது முதல் படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக வழங்கும் முறையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முகம் பார்க்காத கணக்கு தாக்கல் முறையை வருமான வரித்துறை செயல்படுத்தி வருகிறது.வீடு, அலுவலகத்தில் இருந்தபடியே, வருமான வரி கணக்குகளை கம்ப்யூட்டர் மூலம் தாக்கல் செய்யலாம்.

    வருமான வரித்துறை அலுவலகத்துக்கு செல்லவோ, அதிகாரிகளை பார்க்கவோ அவசியமில்லை.கணக்கு விவரங்களை மறைப்பதை கண்டறிந்து, வரி வருவாயை பெருக்குவதற்காக, ஒன்று முதல் 7 வரையிலான வருமான வரி படிவங்களில் அரசு மாற்றம் செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் குறித்து ஆடிட்டர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்வது அவசியம் என்றார்.

    ஆடிட்டர் செல்வகுமார் பேசியதாவது:-

    கடந்த காலங்களில், நாம் அளிக்கும் வருமான கணக்கு விவரங்களை மட்டுமே அரசு பெற்றுக்கொண்டிருந்தது. ஏதேனும் சந்ேதகம் ஏற்பட்டால் அதிகாரிகள் கேள்வி எழுப்புவர். அதற்கு உரிய பதில் அளித்தால் போதுமானது.தற்போது, நமது கணக்கு சார்ந்த விவரங்கள், நம்மை விட அரசிடம் அதிகம் உள்ளது. ஆடிட்டர்கள், சம்பந்தப்பட்ட நபரின் வங்கி ஸ்டேட்மென்ட் விவரங்களை பெற்று, வரவு செலவு ஆகியவற்றை ஆராய்ந்து, வருவாயை மதிப்பீடு செய்வர்.இனி, அதற்கான தேவையில்லை. அரசே ஒவ்வொருவரின் கணக்கு விவரங்களை ஆராய்ந்து, அதில் என்னென்ன வருவாய் உள்ளன என, ஆண்டு தகவல் அறிக்கை (ஏ.ஐ.எஸ்.,)யாக வழங்கிவிடுகிறது. அதில் எல்லாவகை தகவல்களும் இடம்பெற்று விடுகிறது.

    எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது படிவத்தில், சரியான தகவல்களை, சரியான இடத்தில் வழங்குவது முக்கியமானதாகிறது.தவறுகள் ஏற்பட்டால் திருத்த முடியாது.கடந்த காலங்களில் தவறு ஏற்பட்டால் அதிகாரிகளை அணுகி திருத்திக்கொள்ள முடிந்தது. முகம் பார்க்காத நடைமுறைகளால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் மட்டும் கணக்கு தாக்கல் செய்தால் போதும் என பலர் நினைக்கின்றனர். ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவசியம் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×