லைஃப்ஸ்டைல்

விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை நெருங்க முடியாது

Published On 2017-07-03 04:06 GMT   |   Update On 2017-07-03 04:06 GMT
விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை ஒருபோதும் நெருங்க முடியாது. தோல்வியை எதிர்கொள்பவர்கள் மற்றவர்களின் விமர்சனங்களை கேட்டு மனம் தளர்ந்து போய்விடக்கூடாது.
தோல்விகளே தோழனாக வளர்ச்சிக்கு துணை நின்று கொண்டிருக்கும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு செய்யும் தொழிலிலோ, படிப்பிலோ தோல்வியை சந்திப்பவர்கள் தவறு எங்கு, எப்படி நேர்கிறது என்பதை அலசி ஆராய வேண்டும். விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை ஒருபோதும் நெருங்க முடியாது. தோல்வியை எதிர்கொள்பவர்கள் மற்றவர்களின் விமர்சனங்களை கேட்டு மனம் தளர்ந்து போய்விடக்கூடாது.

உங்களின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்காமல் அலட்சியம் செய்தாலும் கவலைப்படக்கூடாது. தோல்வி மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்கும். தொடர் வெற்றிகளை குவிப்பவர்களை தூக்கி வைத்து கொண்டாடும். தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல. இன்று வெற்றியை குவிப்பவன் அதை தக்க வைத்து கொள்ள தவறி, வெற்றி மமதையில் உலா வந்தால் விரைவில் தோல்வி அவனை குடிகொண்டு விடும்.



ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் துவள வேண்டியதில்லை. நம்பிக்கை விதைகளை விதையுங்கள். நிச்சயம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். வெற்றி பெறுபவன் உழைக்கும் நேரத்தை விட இருமடங்கு உழையுங்கள். சோம்பலை துரத்தி சுறுசுறுப்போடு சுழலுங்கள். முந்தைய தோல்வியை பற்றி சிந்தியுங்கள். அதில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மனதில் நிலை நிறுத்தி வெற்றிக்காக போராடுங்கள்.

அதற்காக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் செயல்படாதீர்கள். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். உங்களுடைய கடின உழைப்புக்கு உடனடி பலன் கிடைக்காமல் போகலாம். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போய்விடாதீர்கள். அடுத்த முறை நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்ற மன தைரியத்துடன் செயலாற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
Tags:    

Similar News