லைஃப்ஸ்டைல்

நகங்களின் ஆரோக்கியத்தை காப்பது எப்படி

Published On 2018-03-01 03:34 GMT   |   Update On 2018-03-01 03:34 GMT
சிலருக்கு விரல் நகங்கள் விரைவில் உடைந்து விடும். அவர்கள் சில எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
அடிக்கடி நகங்கள் குறிப்பாக கை நகங்கள் ஏதோ காரணத்தில் பிய்ந்து அதனுடன் உள்ள சதை ‘விண் விண்’ என வலிப்பதும் சில சமயங்களில் வீங்கி, கிருமி பாதிப்பிற்குள்ளாவதும் சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான்.

வெதுவெதுப்பான நீரில் நாள் ஒன்றுக்கு 4 முறை 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட விரலை அமிழ்த்தி வைப்பது ரத்த ஓட்டத்தினை அதிகரித்து சுத்தம் செய்யும்.
நீட்டி இருக்கும் சதை, நகத்தினை வெட்டி விடுவது மேலும் பாதிப்பு ஏற்படுவதினைத் தவிர்க்கும்.

கை விரல் வறண்டு விடாமல் ‘மாஸ்ட் ரைஸர்’ தடவுங்கள். சுத்தமான தேங்காய் எண்ணெய் கூட தடவலாம்.

கிருமி நாசினி கிரீம், பூஞ்ஞை நாசினி கிரீம் என மருத்துவர் பரிந்துரைப்பதனை தடவுங்கள்.

ஆனால் அதில் கட்டி, சீழ் என உருவானால் உடனடியாக மீண்டும் மருத்துவரை அணுகுங்கள்.

அவ்வாறு செய்யாது இருப்பின் தீவிர பாதிப்பு ஏற்படலாம். எனவே முறையான சிகிச்சையினைப் பெறுங்கள். பொதுவில் இத்தகு பாதிப்புகள்



* வறண்ட சருமம்
* நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
* நகத்தினை ரொம்பவும் அதிகமாக வெட்டி விடுதல்
* அடிக்கடி தண்ணீரில் வேலை செய்பவர்கள்
* சர்க்கரை நோயாளிகள்

ஆகியோருக்கு ஏற்படலாம்.

இதனை தவிர்க்கும் விதமாக

* விரல்களை சுத்தமாக வைத்திருங்கள்
* நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள்
* கைகளை தண்ணீரில் அதிக நேரம் வைப்பதை  தவிருங்கள்.
* கையுறை அணிந்து வேலை செய்யுங்கள்
* கைகளுக்கு ‘மாஸ்ட்ரைஸ்’ தடவுங்கள்.

வருமுன் காப்போனாக இருப்பதே சிறந்தது.
Tags:    

Similar News