லைஃப்ஸ்டைல்

பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்

Published On 2018-01-23 06:05 GMT   |   Update On 2018-01-23 06:05 GMT
பெண்களே உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இயற்கை முறையை பின்பற்றி தீர்வு காணலாம்.
சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும். இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகள் இருக்கின்றன

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள். எப்போதும் அழகு நிலை யங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.

* குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

* கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

* உருளைக்கிழங்கை துருவிக்கொண்டு அதனுடன் துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.
Tags:    

Similar News