லைஃப்ஸ்டைல்

கருவளையம் வராமல் தடுப்பது எப்படி?

Published On 2017-11-10 05:51 GMT   |   Update On 2017-11-10 05:51 GMT
தூக்கமின்மை மற்றும் டென்ஷன் காரணமாக கண்ணுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கருவளையம் வராமல் தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
சூரியக் கதிர்வீச்சு, மாசடைந்த காற்று, மாறி வரும் உணவுப் பழக்கம், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியமும், அழகும் கெட்டுப்போகின்றன. துரிதவகை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள், உலர் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் பொலிவைக் கூட்டமுடியும்

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும். தூக்கமின்மை மற்றும் டென்ஷன் காரணமாக கண்ணுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை தரமற்றதாக இருந்தாலும், கருவளையம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை இயற்கையாகத் தயாரிக்கப்படும் கண் மையைப் பயன்படுத்துவது நல்லது. அது கண்களுக்குக் குளுர்ச்சியையும் தந்து, சோர்வையும் போக்கும்.

குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும், சருமம் தொங்கிப் போகாமல் இருக்கும். கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவி, விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். நாளடைவில் கருவளையம் காணாமல் போகும். 
Tags:    

Similar News