லைஃப்ஸ்டைல்

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள்

Published On 2017-10-05 06:49 GMT   |   Update On 2017-10-05 06:49 GMT
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சருமத்தை பொலிவாக்க ஆப்பிளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆப்பிள் பழத்தினை தோல் நீக்கி அதனை நன்றாக மசித்து அதன் உடன் சிறிது துளி தேன், சிறிது அளவு ஓட்ஸ் பவுடரை நன்றாக கலந்து, மசித்த அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் வறண்ட சருமம் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழதுண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்கு கொதிக்க வைத்திடுங்கள், கொதிக்கும் போது அது தயிர் போன்று மாறும், பின்பு அதனை நன்றாக ஆற விட்டு அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் உங்கள் முகத்தில் வறண்ட சருமம் மாறி, முகம் பொலிவுடன் இருக்கும்.
Tags:    

Similar News