லைஃப்ஸ்டைல்

கூந்தல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் உணவுகள்

Published On 2017-09-21 06:46 GMT   |   Update On 2017-09-21 06:46 GMT
தினமுமே சில உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளப் பழகினால் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம்.
தினமுமே சில உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளப் பழகினால் கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம். கூந்தலைப் பாதுகாக்கும் சில உணவுகளை பார்க்கலாம்.

* பொன்னாங்கண்ணி கீரையை மதிய உணவுக்கு பொரியல் செய்து சாப்பிடவும்.

* செம்பருத்திப்பூவை அரைத்து தோசை மாவில் கலந்து செய்து சாப்பிடவும்.

* அரைக்கீரை கூட்டு செய்து காலை மற்றும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளவும் (கூந்தலுக்கு இரும்புச்சத்து கொடுக்கும்).

* வல்லாரை கீரையை சப்பாத்தி மாவு, அரிசி மாவு இதனுடன் கலந்து காலை அல்லது இரவு உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* கறிவேப்பிலையிலேயே முழுஉணவாகச் செய்து சாப்பிடாவிட்டாலும், குழம்பு, ரசம், பொரியலில் சேர்க்கிற இலைகளையாவது ஒதுக்காமல் உண்ணப் பழகலாம்.

* வாரத்தில் ஒரு நாளாவது கார்போக அரிசி சாதம் வடித்து சாப்பிடவும்.

* நில ஆவாரை, துவரம் பருப்பு, தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

* சோற்றுக்கற்றாழை சாறு குடிக்கலாம்.



* முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து அப்படியே மென்று சாப்பிடலாம்.

* கீழாநெல்லி சாறு 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் தயிர், சிறிது அளவு உப்பு சேர்த்து குடிக்கவும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா தூள் கிடைக்கும். தண்ணீரில் 1 டீஸ்பூன் திரிபலா தூள் கலந்து அந்த நீரை குடிக்கவும்.

* குப்பைமேனி, பருப்புடன் கலந்து கூட்டு செய்து சாப்பிடவும்.

* முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, பசலைக்கீரை, வெந்தயம் ஆகியவற்றை வேக வைத்து கூட்டு செய்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடவும்.

* 2 நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து  தேன் கலந்து குடிக்கவும்.

* அறுகம்புல் சாற்றில் தேன் கலந்து குடிக்கவும்.

* வல்லாரைக் கீரையில் சாறு எடுத்து எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்துகுடிக்கவும்.

* பால், முட்டை, மீன் இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

* முளைக்கட்டிய கருப்புக் கொண்டைக் கடலையை வேக வைத்து மாலையில் எடுத்துக் கொள்ளவும்.

* தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடவும்.

* குழம்பில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளவும். நாவல்பழம் சாப்பிடவும்.
Tags:    

Similar News