லைஃப்ஸ்டைல்

சாதத்திற்கு அருமையான மொச்சை மசாலா

Published On 2018-02-14 06:45 GMT   |   Update On 2018-02-14 06:45 GMT
சாதம், தோசை, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த மொச்சை மசாலா. இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சை மொச்சைப் பருப்பு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - 2,
பூண்டு பல் - 5,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்



செய்முறை :

தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மொச்சையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா]
மிளகாய்த்தூள்,
உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த மொச்சை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

கலவை கெட்டியாக வரும் போது [பாட்டி மசாலா] மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான மொச்சை மசாலா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News