லைஃப்ஸ்டைல்

சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி

Published On 2018-01-20 08:50 GMT   |   Update On 2018-01-20 08:50 GMT
சிறுதானியங்களில் பல்வேறு வகையான உணவுகளை செய்யலாம். இன்று சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

சாமை அரிசி - ஒரு கப், 
பூண்டு - 2 பல், 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு, 
பட்டை - 2, 
ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, 
லவங்கம் - 3, 
கலந்த காய்கறி துண்டுகள் (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) - 2 கப், 
பச்சைப் பட்டாணி - கால் கப், 
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
நெய் - ஒரு டீஸ்பூன், 
கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு, 
முந்திரி - 5, 
பெரிய வெங்காயம் - 1, 
உப்பு - ஒரு சிட்டிகை, 
தண்ணீர் - 3 கப், 
தக்காளி - 1, 
தயிர் - சிறிதளவு, 
எலுமிச்சைப் பழம் - பாதி, 
உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.

காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். 

அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் மற்றும் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச்  சேர்த்துக் கிளறவும். 

இப்போது மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இதனுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும். 

அடுத்து அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News