லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

Published On 2017-12-27 09:01 GMT   |   Update On 2017-12-27 09:01 GMT
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், காய்கறிகள் வைத்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

நூடுல்ஸ் - கால் கப், 
கேரட் - ஒன்று, 
குடைமிளகாய் - ஒன்று, 
வெங்காயத்தாள் - ஒன்று, 
பச்சை மிளகாய் - ஒன்று, 
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், 
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், 
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, 
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை : 

கேரட், குடைமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடைமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். 

அடுத்து அதில் தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். 

நூடுல்ஸ் வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். 

சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து... உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

அருமையான நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News