லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய்

Published On 2017-12-13 06:55 GMT   |   Update On 2017-12-13 06:55 GMT
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

இஞ்சி - 100 கிராம், 
நெல்லிக்காய் - 100 கிராம், 
பூண்டு - 50 கிராம், 
வெல்லம் - சிறிது, 
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி, 
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி, 
வெந்தயம் (வறுத்துப் பொடித்தது) - 2 மேசைக்கரண்டி, 
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் (தோல் நீக்கி) அரைத்துக்கொள்ளவும். 

நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை எடுத்து விட்டு மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வேகவைத்து மசித்த நெல்லிக்காய், வெல்லம், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி இறக்கவும்.

சூப்பரான இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News