லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி வெஜிடபிள் பிரியாணி

Published On 2017-12-12 07:08 GMT   |   Update On 2017-12-12 07:08 GMT
பொரி வெஜிடபிள் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட் - 50 கிராம் 
முட்டைக்கோஸ் - 50 கிராம் 
பச்சை பட்டாணி - 50 கிராம் 
தக்காளி - 50 கிராம் 
வெங்காயம் - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம் 
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கட்டு
பொரி - 1 கிலோ 
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 ஸ்பூன் 
[பாட்டி மசாலா] தனியா தூள் - 1 டீஸ்பூன் 
டோமேடோ சாஸ் - 1 ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 ஸ்பூன் 
உப்பு, எலுமிச்சபழச் சாறு - சுவைக்கேற்ப 



செய்முறை :

கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், தக்காளி, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, பச்சை பட்டாணியை போட்டு வதக்க வேண்டும். 

காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] தனியா தூள் போட்டு நன்றாக பச்சை வாசம் போக வதக்க வேண்டும். 

இறுதியாக உப்பு, சோயா சாஸ், டோமேடோ சாஸ் ஊற்றி இறக்கி பொரியை போட்டு கிளறி எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறி பரிமாறலாம்.

சூப்பரான பொரி வெஜிடபிள் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News