லைஃப்ஸ்டைல்

சருமத்தை பொலிவாக்கும் பேரீச்சம்பழ பேஸ்பேக்

Published On 2017-11-16 05:56 GMT   |   Update On 2017-11-16 05:57 GMT
பேரீச்சம்பழம் மருந்தாக மட்டுமில்லாமல் சருமத்தின் கருமையைப் போக்கி, பொலிவாகவும் சிகப்பாகவும் மாற்றும் அற்புதத்தையும் செய்கிறது.
நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை, கால் பகுதி கருமையடைந்து விடுகிறது.

இதற்கு என்னதான் ரசாயனங்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினாலும் அவை தாற்காலிகமாக மட்டுமே மாற்றத்தைத் தருகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளும் பராமரிப்பு தான் நிரந்தரத் தீர்வைத் தரும்.

தேவையான பொருட்கள்


கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 5
உலர்ந்த திராட்சை பழம் - 13
பப்பாளி பழக்கூழ் - அரை டீஸ்பூன்

இவை இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்கு மை போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பின்பு இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டு, 30 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேஸ் பேக்கை வாரம் 3 முறை போட்டு வரலாம். இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சருமம் பொலிவடைவதை காணலாம்.
Tags:    

Similar News