லைஃப்ஸ்டைல்

மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி

Published On 2017-11-11 09:43 GMT   |   Update On 2017-11-11 09:43 GMT
நாளை ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டன் கீமாவை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
ப.மிளகாய் - 5
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 
செய்முறை :

மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், ப.மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.

இப்போது போதுமான உப்பு சேர்க்கவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News