லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்

Published On 2017-10-26 09:51 GMT   |   Update On 2017-10-26 09:51 GMT
மாலை நேரத்தில் சூடான காப்பி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த அவல் மிக்சர். இது செய்தும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பொரித்த அரிசி அவல் - 4 கப்,
ஓமப்பொடி - 2 கப்,
ரிப்பன் முறுக்கு - 2 கப்,
டைமண்ட் பிஸ்கெட் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 கப்,
வறுத்த முந்திரிப்பருப்பு - 1/2 கப்,
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன்.



செய்முறை :

கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள் தூவிக் கொள்ளவும்.

ஆறியதும் மூடி போட்ட பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News