லைஃப்ஸ்டைல்

சூப்பரான குதிரைவாலி பைனாப்பிள் கேசரி

Published On 2017-10-03 07:14 GMT   |   Update On 2017-10-03 07:14 GMT
சிறுதானியங்களை கொண்டு சத்தான சுவையான உணவுகளையும், இனிப்பு வகைகளையும் செய்யலாம். இன்று குதிரைவாலி பைனாப்பிள் கேசரி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - ஒரு கப்
பைனாப்பிள் துண்டுகள் - அரை கப்
பைனாப்பிள் ஜூஸ் - அரை கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு



செய்முறை :

குதிரைவாலி அரிசியை ரவை போல் உடைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடாக்கி முந்திரியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் குதிரைவாலி ரவையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பைனாப்பிள் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரைவாலி அரிசி நன்றாக வறுபட்டதும இதனுடன் இரண்டரை கப் நீர், பைனாப்பிள் ஜூஸ் கால் கப் சேர்த்து வேக விடவும். ரவை நன்கு வெந்ததும் இதில் பைனாப்பிள் துண்டுகள், முந்திரி, நெய் சேர்த்துக் கிளறவும்.

சூப்பரான குதிரைவாலி பைனாப்பிள் கேசரி தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News