அழகுக் குறிப்புகள்
null

ஆளி விதை முடி வளர்ச்சிக்கு உதவுமா….?

Published On 2024-05-24 08:57 GMT   |   Update On 2024-05-24 09:50 GMT
  • வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

Tags:    

Similar News