உடற்பயிற்சி

பெரிய பைசப்ஸ்களை பெற எளிமையான உடற்பயிற்சி

Published On 2024-05-24 10:15 GMT   |   Update On 2024-05-24 10:15 GMT
  • முதலில் டிரை சப்ஸ் பகுதியில் உள்ள மூன்று ஹெட்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
  • முறையான பயிற்சி செய்தால் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும்.

வலிமையான மற்றும் தோரணையான பெரிய பைசப்ஸ் பெற முயற்சி செய்பவர்கள் தம்பில்ஸ் வைத்து மாங்கு மாங்கு என்று பயிற்சி செய்வதை பார்த்திருப்போம். ஆனால் முறையான பயிற்சி செய்தால் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும்.

தம்பில்ஸ்சை வைத்து கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே வலிமையான மற்றும் தோரணையான பெரிய கைகளை பெற முடியாது. ஏனெனில் கைகளில் மூன்றில் இரண்டு மடங்கு ட்ரைசப்ஸ் உள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு உள்ள பைசப்ஸ் பகுதிகளுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்துவதால் நல்ல பலன் கிடைக்காது.

எனவே ட்ரை சப்ஸ் மற்றும் பைசப்ஸ் பகுதிகளுக்கு உடற்பயிற்சியை முறையாக செய்துவர வேண்டும்.

ட்ரை சப்ஸ்:

ட்ரை சப்ஸ் என்பது லாங் ஹெட், லாட்டரல் ஹெட், மிடயல் ஹெட் என்று மூன்று பகுதிகளாக உள்ளது. எனவே இது ட்ரைசப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

எடுப்பனா பைசப்ஸ்சை பெற முதலில் ட்ரை சப்ஸ் பகுதியில் உள்ள மூன்று ஹெட்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியாக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய பல டம்பில் கர்ல் பயிற்சிகள் உள்ளன.

பைசப்ஸ் :

பைசப்ஸ் பகுதிக்கும் ட்ரை சப்ஸ் பகுதிக்கும் இடையில் பிரேக்யாலிஸ் எனப்படும் சதைப் பகுதி காணப்படும்.

இந்த பிரேக்யாலிஸ் பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் பயிற்சி செய்வதன் மூலம் பைசப்ஸ் பகுதிக்கும் ட்ரை சப்ஸ் பகுதிக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகம். இது ஆர்ம்ஸ் பருமனாக வளர உதவுகிறது.

Tags:    

Similar News