லைஃப்ஸ்டைல்

கருவாடு கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

Published On 2017-09-27 07:01 GMT   |   Update On 2017-09-27 07:01 GMT
சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கருவாடு கத்திரிக்காய் பொரியல் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
கருவாடு - 50 கிராம்
தக்காளி - 2 பெரியது
ப.மிளகாய் - 4
பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள)
மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



செய்முறை :

கத்திரிக்காய், வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கருவாட்டை நன்றாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்க்கவும்.

கத்திரிக்காய், வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.

பின்பு கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி போடவும். பின்பு திறந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் பொரியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News