லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் காளான் சுக்கா

Published On 2017-09-25 09:51 GMT   |   Update On 2017-09-25 09:51 GMT
காளான் சுக்கா சப்பாத்தி மற்றும் மிளகு ரசம், பருப்பு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு பல் - 5
கறிவேப்பிலை - 1
காளான் - 200 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - முக்கால் டீஸ்பூன்
மிளகு தூள் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காளாளை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை, நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

தண்ணீர் ஊற்றாமல் அப்படியே அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும். காளான் விரைவில் வெந்து விடும். காளான் வெந்ததும் திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி கிளறி எடுத்து பரிமாறவும்.

கெட்டியான பதத்தில் இருக்கும் காளான் சுக்கா சப்பாத்தி மற்றும் மிளகு ரசம், பருப்பு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News