லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை அடை

Published On 2019-01-23 04:33 GMT   |   Update On 2019-01-23 04:33 GMT
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை - ஒரு கப்,
அரிசி  - அரை கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
உளுந்தம்பருப்பு - சிறிதளவு,
கடலைப்பருப்பு - கால் கப்,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு,



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான சுவையான கோதுமை அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News