லைஃப்ஸ்டைல்

சத்தான கீரை கோதுமை ரவா பொங்கல்

Published On 2017-12-19 03:26 GMT   |   Update On 2017-12-19 03:26 GMT
கோதுமை ரவையுடன், கீரை சேர்த்து பொங்கல் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கீரை கோதுமை ரவா பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

முளைக்கீரை - ஒரு கப், 
கோதுமை ரவை - 1 கப் 
நெய் - 2 டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] மிளகு தூள் - 2 டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 2 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
இஞ்சி - சிறிதளவு, 
வறுத்த முந்திரிப்பருப்பு - 10, 
கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு.



செய்முறை : 

முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

ஒரு பங்கு கோதுமை ரவைக்கு நான்கு பங்கு தண்ணீர் என்ற சேர்த்து, குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். 

கடாயில் நெய் விட்டு [பாட்டி மசாலா] மிளகு, [பாட்டி மசாலா] சீரகப் பொடி, இஞ்சி, போட்டு தாளித்த பின்னர் கீரை, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். 

அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

கீரை நன்றாக வெந்தவுடன் வேகவைத்த ரவை, வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான கீரை கோதுமை ரவா பொங்கல் ரெடி.

குறிப்பு: ஊட்டச்சத்து மிகுந்தது. எளிதில் ஜீரணமாகும். இதற்கு எல்லா வகையான கீரையை பயன்படுத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News