லைஃப்ஸ்டைல்

குதிரைவாலி காய்கறி வெந்தய கஞ்சி

Published On 2017-11-18 05:38 GMT   |   Update On 2017-11-18 05:38 GMT
இன்று சிறுதானியங்களில் முக்கியமான குதிரைவாலி அரிசியுடன் காய்கறி, வெந்தயம் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால்கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு.
பாட்டி மஞ்சள் தூள் - சிறிதளவு,
பூண்டு - 4 பற்கள்,
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்



செய்முறை :

கேரட், பூண்டு, ப.மிளகாய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

குதிரைவாலி, பாசிப்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

அடுத்து கேரட், ப.மிளகாய், பீன்ஸ், சிறிதளவு கொத்தமல்லி, புதினா, உப்பு, பூண்டு, பாட்டி மஞ்சள் தூள், இஞ்சி சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 3 விசில் வந்ததும் மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.

குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான குதிரைவாலி காய்கறி வெந்தய கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News