லைஃப்ஸ்டைல்

இன்றைய ஸ்பெஷல் குதிரை வாலி ரவா தோசை

Published On 2017-11-01 05:23 GMT   |   Update On 2017-11-01 05:23 GMT
சிறுதானியங்களை கொண்டு சத்தான சுவையான உணவுகளை செய்ய முடியும். இன்று குதிரைவாலி ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரை வாலி அரிசி - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 2

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் வற்றல் - 2.



செய்முறை :

ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரை வாலி அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து ஆற விடவும்.

ஆறிய வறுத்த அரிசியை மிக்சியில் போட்டு ரவை போல் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடி பண்ணிய குதிரைவாலி அரிசி, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மாவுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

சூப்பரான குதிரை வாலி ரவா தோசை ரெடி.

இதற்கு சரியான சைடிஷ் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News