லைஃப்ஸ்டைல்

அவல் தேங்காய் தயிர் பச்சடி

Published On 2017-10-05 03:30 GMT   |   Update On 2017-10-05 03:30 GMT
சப்பாத்தி, நாண், புலாவ், வெஜிடபிள் பிரியாணியுடன் சாப்பிட சூப்பரானது இந்த அவல் தேங்காய் தயிர் பச்சடி. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கெட்டித் தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கெட்டி அவல் - 4 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - கால் கப்,
பச்சைமிளகாய் - 2.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், அவல், உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து தயிர் கலவையில் கொட்டி கொத்தமல்லித்தழையை தூவி வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

சூப்பரான சத்தான அவல் தேங்காய் தயிர் பச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News