லைஃப்ஸ்டைல்

சத்தான சாமை மாங்காய் சாதம்

Published On 2017-10-02 02:45 GMT   |   Update On 2017-10-02 02:45 GMT
சிறுதானியங்களை வைத்து சத்தான மதிய உணவை தயாரிக்கலாம். இன்று சாமை அரிசியை வைத்து சூப்பரான மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

சாமை அரிசி - ஒரு கப்
மாங்காய்த் துருவல் - கால் கப்
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா கால் டீஸ்பூன்
இஞ்சித்துருவல் - கால் டேபிள்ஸ்பூன்.



செய்முறை :

சாமை அரிசியை வேக வைத்து எடுத்து, ஹாட் பாக்ஸில் வைக்கவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கீறிய பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளிக்கவும்.

இதனுடன் மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும்.

கடைசியாக இத்துடன் சாமை சாதம், ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். நன்கு கிளறி எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான சத்தான சாமை மாங்காய் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News