லைஃப்ஸ்டைல்

கொள்ளு - கேழ்வரகு இனிப்பு அடை

Published On 2017-08-10 05:21 GMT   |   Update On 2017-08-10 05:22 GMT
காலை, மாலையில் சிற்றுண்டியாக சாப்பிட கொள்ளு, கேழ்வரகு வைத்து சத்தான சுவையான அடை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொள்ளு (காணம்) - கால் கிலோ
ராகி (கேழ்வரகு) - 150 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
கருப்பட்டி - சுவைக்கு தேவையான அளவு
ஏலக்காய் - 5
சமையல் எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

கொள்ளு, ராகி, பொட்டுக்கடலை இவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

கருப்பட்டியைப் பாகு காய்ச்சி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி பாகு, அரைத்த மாவு, ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை நன்றாக அழுத்தி, 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, கல் சூடேறியதும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தோசை கல்லில் போட்டு மெலிதாக தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

சிற்றுண்டியாகச் சாப்பிட சுவையான, பாரம்பரியப் பலகாரம் இது. கொள்ளு, ராகி, கருப்பட்டி சேர்ந்துள்ளதால் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News