லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கார கோதுமை ரொட்டி

Published On 2017-08-06 05:30 GMT   |   Update On 2017-08-06 05:31 GMT
ரொட்டியில் செய்யும் இந்த கார ரொட்டிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. இன்று இந்த கார ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும்.

சூப்பரான கார கோதுமை ரொட்டி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News