லைஃப்ஸ்டைல்

ஆரோக்கியமான கேழ்வரகு சேமியா முளைகட்டிய பயறு

Published On 2017-08-06 03:21 GMT   |   Update On 2017-08-06 03:21 GMT
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு சேமியா, முளைகட்டிய பயறு வைத்து சத்தான உணவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு சேமியா - 2 கப்
பச்சை பயறு முளைகட்டியது - அரை கப்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிள்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு

செய்முறை :

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைகட்டிய பச்சை பயறை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ராகி சேமியா எடுத்து அத்துடன் கொதிக்கும் நீரை சேர்த்து உப்பு போட்டு 2 நிமிடம் வைத்து வடிகட்டி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடிக்கவும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் வேக வைத்த முளைகட்டிய பயறு, சேர்த்து வதக்கி, வடிகட்டிய ராகி சேமியா சேர்த்து கிளறவும்.

அத்துடன் சுவைக்கு எலுமிச்சை சாறு, உப்பு சிறிது சேர்த்து பிரட்டி இறக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான ஆரோக்கியமான ராகி சேமியா முளைகட்டிய பயறு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News