லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் கொள்ளுக்கஞ்சி

Published On 2017-07-01 03:35 GMT   |   Update On 2017-07-01 03:35 GMT
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளுவை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு - 3/4 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துறுவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* பூண்டை தட்டி வைக்கவும்.

* கொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த கொள்ளு, பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 விசில் வைத்து இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து தேங்காய்த்துறுவல் சேர்த்து கஞ்சியை பரிமாறவும்.

* சத்தான கொள்ளு கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News