லைஃப்ஸ்டைல்

சத்தான காலை உணவு கேழ்வரகு பாதாம் கஞ்சி

Published On 2017-06-26 05:23 GMT   |   Update On 2017-06-26 05:23 GMT
கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். இன்று கேழ்வகுடன் பாதாம் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு - 200 கிராம்,
பாதாம் பருப்பு - 50 கிராம்,
தண்ணீர் - 4 டம்ளர்,
மோர் - 2 டம்ளர்,
சின்ன வெங்காயம் - 6,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 3,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.



செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும்.

* முளை கட்டிய கேழ்வரகை கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும்.

* இந்த கேழ்வரகு கலவையை அடுப்பில் வைத்து கைவிடால் கிளறி கொண்டே இருக்கவும்.

* அடுத்து அதில் பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும்.

* நன்றாக கொதித்து கேழ்வரகு வெந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேழ்வரகில் கொட்டவும்.

* அடுத்து அதில் மோர், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு பாதாம் கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News